
ஷா அலாம், அக்- 29 ,
கோலா லங்காட் , Sungai Jarom மில் உணவுக் கடை ஒன்றில் ஆயுதம் ஏந்தி கொள்ளையிட்டதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் நால்வர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். நேற்று மாலை மணி 7 அளவில் 48 வயதுடைய பெண் வர்த்தகர் ஒருவர் வர்த்தகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்ததாக கோலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan முகமட் அக்மால்ரிஷால் ரட்ஷி (Mohd Akmalrizal Radzi ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். முகமூடி அணிந்த மூன்று சந்தேகப் பேர்வழிகள் கையில் பாராங் கத்தியுடன் கடைக்குள் புகுந்த வேளையில் மற்றொரு ஆடவன் கடைக்கு வெளியே உள்ள காரில் காத்திருந்தான்.
அந்த சந்தேகப் பேர்வழிகள் பெண் வர்த்தகரின் கணவர் அணிந்திருந்த ஒரு தங்கச் சங்கிலி , மற்றும் புகார்தாரர் அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகள் ,
இரண்டு மோதிரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்த பின்னர் அங்கிருந்து தப்பியோடினர். இந்த நகைகளின் மொத்த மதிப்பு 10,000 ரிங்கிட்டாகும் என முகமட் அக்மால்ரிஷால் கூறினார். இந்த கொள்ளைச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள் எந்தவொரு காயத்திற்கும் உள்ளாகவில்லை.



