
மூவார், அக்டோபர் 14 –
சுமார் 12 மணி நேர தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைக்குப் பிறகு, நேற்று மாலை சுங்கை பாஞ்சோர் (Sungai Panchor) ஆற்றில் விழுந்த கார் டிரைவரின் சடலம் இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டது.
மீட்பு குழுவினர் ஆற்றங்கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திலும் 15 மீட்டர் ஆழத்திலும் அந்தக் காரை கண்டறிந்தனர் என்று பாகோ (Pagoh) தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நிலையத்தின் செயல்பாட்டு தளபதி நோர் அல்பாத்தா ஓமர் (Nor Alfatah Omar) கூறினார்.
இந்நிலையில் அவரின் கார் ‘கிரேனின்’ உதவியுடன் ஆற்றிலிருந்து உயர்த்தப்பட்டபோது 47 வயதுடைய அந்த ஆடவரின் உடல் மீட்பு பணியாளர்களால் கண்டெடுக்கப்பட்டது.
மேலும் உயிரிழந்தவரின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு மேல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.