
சுங்கை பட்டானி, ஜனவரி 26 – சுங்கை பட்டானி Gurun Jeniang, பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், 36 வயதுடைய ஒருவர் மீது அமிலம் அதாவது acid வீசப்பட்ட சம்பவத்தில், அவரது முகம், கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
குவாலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் Assistant Commissioner Hanyan Ramlan கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் குறித்து ஒரு பெண்ணிடமிருந்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.
கம்போங் ஜெனியாங் பகுதியைச் சேர்ந்த உணவகம் canteen) ஊழியரான பாதிக்கப்பட்டவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, 36 வயதுடைய ஓட்டுநர் ஒருவரை இன்று கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், இந்த தாக்குதல் பொறாமை காரணமாக நடந்ததாக தெரியவந்துள்ளது. சந்தேக நபரை தடுப்பு காவலில் வைப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் தற்போது சுல்தான் அப்துல் ஹாலிம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



