
பாடாங் – ஜூலை 15 – இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் படகு
கவிழ்ந்ததில் காணாமல்போன 11 பேரில் பெரும்பாலோர் மீட்கப்பட்டு விட்டதை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர். Mentawai தீவுகளுக்கு அருகே அந்த படகு கவிழ்ந்ததில் இடிபாடுகளுடன் உதவியோடு மிதந்துகொண்டிருந்த உயிர் தப்பியவர்கள் பின்னர் மீட்கப்பட்டனர். திங்கட்கிழமை காலை 11 மணியளவில் அந்த படகு கவிழ்ந்ததாக Mentawai தேடும் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்தது.
இந்த சம்பவத்தில் தொடக்கத்தில் 11 பேர் காணாமல்போனதாக தகவல்கள் வெளியாகின. எனினும் அவர்களில் 10 பேர் பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஒருவர் இன்னும் கண்டுப்பிடிக்கபடவில்லை என்ற போதிலும் அவரை கண்டுப்பிடிக்க முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர். இந்த பேரிடரில் 17 பேர் பாதுகாப்புடன் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது.