
வெலன்சியா, நவம்பர்-2, ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் பல தலைமுறைகள் காணாத பெருவெள்ளத்தால் ஏராளமான மக்கள், தங்களின் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர்.
குறிப்பாக கிழக்கு மாநிலமான வெலன்சியா, (Valencia) அடைமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஒரு வருடத்திற்குப் பெய்ய வேண்டிய மழை, வெறும் எட்டே மணி நேரங்களில் கொட்டித் தீர்த்ததாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சித் துறை கூறியது.
இதுவரை குறைந்தது 158 பேர் வெள்ளத்தில் உயிரிழந்துள்ள வேளை, பலரை இன்னும் காணவில்லை.
இதையடுத்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.