Latestமலேசியா

செந்தூலில் வீடற்ற பெண் கொலை; குற்றஞ்சாட்டப்பட்டவர் மனநல பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்

செந்தூலில் வீடற்ற பெண் கொலை; குற்றஞ்சாட்டப்பட்டவர் மனநல பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்

கோலாலாம்பூர், பிப்ரவரி-20,

ஜாலான் செந்தூலில் ஒரு வீடற்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில் கைதுச் செய்யப்பட்ட ஆடவரை, மனநல பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் மனநல பிரச்னை கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுவதே அதற்குக் காரணம்.

46 வயது Syed Faizal Syed Alwi முன்னதாக கோலாலாம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பிப்ரவரி 9-ஆம் தேதி காலை 6.35 மணி முதல் 6.36 மணி வரை ஒரு அடையாளம் தெரியாத பெண்ணை ஜாலான் செந்தூலில் உள்ள ஒரு கடை முன்பு கொலை செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அவர் வெறும் தலையை மட்டுமே அசைத்தார்.

மரணத்திற்கானக் காரணம் தலையில் மோதிய கூர்மையற்ற பொருள் என்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் சவப்பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை;

இதையடுத்து மார்ச் 19-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென அறிவிக்கப்பட்டது.

கொலைக் குற்றம் என்பதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் சிறையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!