Latestமலேசியா

செம்போர்னாவில் 3 வாகனங்கள் மோதிய விபத்தில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

செம்போர்னா, ஜனவரி-13,

சபா, செம்போர்னாவில் 3 கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஓர் ஆண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாயினர்.

நேற்று மாலை 5 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

மரணமடைந்தவர்கள் முறையே 3 ஆண்கள், ஒரு பெண், ஒரு சிறுமி, ஒரு கைக் குழந்தை ஆவர் என தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.

அந்த அறுவருடன் Proton Wira காரில் பயணித்த இன்னோர் ஆடவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

விபத்தில் சம்பந்தப்பட்ட மற்ற 2 கார்களின் ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் காயமேற்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!