
பாகிஸ்தான், ஜூலை 21 – கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் கராச்சியில் முன் கால் துண்டிக்கப்பட்ட ‘காமி’ என்ற பெயர் கொண்ட ஒட்டகம், செயற்கை கால் பொருத்தப்பட்டு, நடக்க ஆரம்பித்தைக் கண்ட அதன் பராமரிப்பாளர்கள் உணர்ச்சி பெருக்கில் கண் கலங்கினார்கள்.
முன்னதாக பாகிஸ்தானில், தீவனம் தேடி வயலுக்குள் நுழைந்தற்காக, அந்த நிலத்தின் உரிமையாளன், அந்த ஒட்டகத்தின் முன் காலைத் துண்டித்து மூர்க்கத்தனமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் ஒரு பெரிய விலங்குக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது இதுவே முதல் முறை என்று உள்ளூர் கால்நடை மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலான அந்தக் காயமடைந்த ஒட்டகத்தின் வீடியோ, அரசாங்கத்தின் விரைவான நடவடிக்கையைத் தூண்டியது என்றும், காப்பகத்திற்கு கொண்டு வந்த பிறகு பராமரிப்பாளர்கள் அதன் நம்பிக்கையைப் பெறுவதற்கு பல்வேறு யுக்திகளைக் கையாண்டார்கள் என்றும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
செயற்கை கால் பொருத்தப்பட்ட பிறகு, அதன் முதல் நடையைக் கண்ட காப்பக பாராமரிப்பாளர்களின் மகிழ்ச்சி பலரையும் உணர்ச்சிவசப்பட செய்துள்ளது.