
கோலாலம்பூர், டிசம்பர்-3 – ஊழியர் சேமநிதி வாரியமான EPF-பின் மூன்றாவது கணக்கான Akaun Fleksibel-லிலிருந்து, சந்தாத்தாரர்கள் செப்டம்பர் 30 வரை 10.78 பில்லியன் ரிங்கிட் பணத்தை மீட்டுள்ளனர்.
55 வயதுக்குக் கீழ்பட்ட சந்தாத்தாரர்களில் 3.86 மில்லியன் பேர் அல்லது 29.4 விழுக்காட்டினரை அது உட்படுத்தியுள்ளது.
சந்தாத்தாரர்களின் அவசரப் பணத்தேவைக்கு எந்தளவுக்கு EPF-ஃபின் மூன்றாவது கணக்கு உதவுகிறது என
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் நிதியமைச்சு அவ்வாறு கூறியது.
குறுகிய கால அவசர பணத் தேவையைச் சமாளிக்க சந்தாத்தாரர்களுக்கு உதவும் பொருட்டு, இந்த மூன்றாவது கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ குறிப்பாக ஆபத்து அவசர நேரங்களில் அக்கணக்கிலிருந்து சந்தாத்தாரர்கள் பணத்தை மீட்க முடியும்.
EPF மாதச் சந்தா பங்களிப்பில் 10 விழுக்காட்டுத் தொகை, இந்த மூன்றாவது கணக்கில் போடப்படுகிறது.