கோலாலம்பூர், செப்டம்பர்-17 – கடந்தாண்டு செராசில் ஓர் ஆடவரைக் கடத்தியதாகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை, வேலையில்லாத நண்பர்கள் மூவர் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணைக் கோரினர்.
35 வயது Mohammad Izzul Haikal Zainodin, 33 வயது Zairen Idzwan Mohd Haslin, 41 வயது Hoezniezam Hamzah ஆகிய மூன்று நண்பர்களும், மேலுமொருவனுடன் குற்றம் சாட்டப்பட்டனர்.
27 வயது நபருக்கு படுகாயம் விளைவிக்கும் நோக்கத்தோடு, 2023 செப்டம்பர் 3-ம் தேதி கம்போங் முஹிபா PPR வீடமைப்புத் திட்டத்தின் கார் நிறுத்துமிடத்தில் வைத்து, அவரைக் கடத்திச் சென்றதாக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
மூவருக்கும் ஜாமீன் வழங்காத நீதிமன்றம் செப்டம்பர் 23-ல் வழக்கு அடுத்து விசாரணைக்கு வருமென அறிவித்தது.