செர்டாங், டிசம்பர்-19, சிலாங்கூர், செர்டாங்கில் உள்ள பள்ளியொன்றில் ஆறாமாண்டு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
அச்சிறுவனின் தாயார் அது குறித்து புகாரளித்திருப்பதாக, செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் AA அன்பழகன் கூறினார்.
சுயநினைவற்ற நிலையிலிருந்த 12 வயது அம்மாணவன் நேற்று மாலை 6.50 மணியளவில் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டது.
மரணத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய, சவப்பரிசோதனை அறிக்கைக்காகக் போலீஸ் காத்திருக்கிறது.
தற்சமயத்திற்கு அது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக, அன்பழகன் சொன்னார்.
எனவே, விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான யூகங்களை எழுப்பி நிலைமையை மோசமாக்க வேண்டாமென பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.