
நியூயார்க், ஜூலை 14 – வரும் புதன்கிழமை, நியூயார்க் நகரில், செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக நம்பப்படும் 25 கிலோ கிராம் எடையிலான கல் ஒன்று, 2 மில்லியன் முதல் 4 மில்லியன் அமெரிக்க டாலர் வரை ஏலத்தில் விற்கப்படவுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து இந்த விண்கல், சிறுகோள் ஒன்றால் அடித்துச் செல்லப்பட்டு ,பூமிக்கு 225 மில்லியன் கிலோமீட்டர் வரை பயணித்து, சஹாராவில் மோதியதுள்ளது என்று அறியப்படுகின்றது.
சிவப்பு, பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் உள்ள இந்த துண்டு, பூமியில் காணப்படும் மிகப்பெரிய செவ்வாய் கிரகத் துண்டை விட சுமார் 70 சதவீதம் பெரியது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அதே ஏல நிகழ்வின் போது, சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த 2 அடி உயரம் மற்றும் 3 அடி நீளத்திலான டைனசோர் எலும்புக்கூடு ஒன்று 6 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் விற்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.