Latestஇந்தியா

சேரி குழந்தைகளின் ஆடை அலங்காரம்; மனதைக் கொள்ளைககொள்ளும் வீடியோ

லக்னோவ், நவம்பர்-24,இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் சேரிப் பகுதியில் வாழும் சிறார்கள் நடத்திய fashion shoot ஆடை அலங்கார படப்பிடிப்பு வைரலாகியுள்ளது.

அதில் பங்கேற்ற பள்ளி மாணவர்களை, அந்த வைரல் வீடியோ ஒரே நாளில் உள்ளூர் பிரபலங்களாயிருக்கின்றது.

பெரும்பாலும் பெண்களான 12 முதல் 17 வயதிலான அம்மாணவர்கள், வீசப்பட்ட துணிகளால் தாங்களே வடிவமைத்த சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான ஆடைகளை அணிந்திருந்தனர்.

சேரிப்பகுதியின் கரடுமுரடான சுவர்களைக் பின்னால் காட்டும் வகையில் அந்த ஆடை அலங்கார அணிவகுப்பை, 15 வயது பையன் பதிவுச் செய்து எடிட் செய்துள்ளான்.

லக்னோவில் இயங்கி வரும் அரசு சார்பற்ற அமைப்பான Innovation For Change முயற்சியில் அந்த ஃபேஷன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

லக்னோ சேரிப் பகுதிகளில் வாழும் 400 குழந்தைகளுக்கு இலவச உணவு,
கல்வி, வேலைத் திறன்கள் போன்றவற்றை வழங்கும் நல்லெண்ண காரியங்களில் அந்த NGO ஈடுபட்டு வருகிறது.

ஆடை அலங்கார படப்பிடிப்பில் பங்கேற்ற பிள்ளைகளும் அந்த அமைப்பின் மாணவர்களாவர்.

குறைந்த பட்ஜெட்டில், தானமாகக் கொடுக்கப்பட்ட துணிகளைக் கொண்டு, நேர்த்தியாக எடுக்கப்பட்ட வீடியோ என, அந்த ஃபேஷன் வீடியோவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அக்குழந்தைகளின் புகழ் பரவி வானொலி பேட்டிகள் வரை சென்று விட்டன.

பிரபல நடிகை தமன்னாவே அவர்களை நேரில் சென்று பாராட்டி, அவர்களிடமிருந்து scarf தாவணியைப் பரிசாகப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!