
சிரம்பான், செப்டம்பர்-30, பிள்ளையைப் பல்கலைக்கழகத்தில் விட்டு விட்டு வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரில் இருவர் உயிரிழந்தனர்.
அத்துயரச் சம்பவம் Jalan Kuala Pilah – Tampin சாலையின் 21-வது கிலோ மீட்டரில் நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் நிகழ்ந்தது.
Lendu-விலிலுள்ள UiTM பல்கலைக்கழகத்தில் பிள்ளையை விட்டு விட்டு, Johol-லில் உள்ள வீட்டுக்குத் திரும்பும் வழியில், அவர்கள் பயணித்த Perodua Axia கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பை மோதிய போது விபத்து ஏற்பட்டது.
மரணமடைந்தவர்கள் 64 வயது தந்தையும் 31 வயது மகனுமாவர்.
62 வயது தாயும் 28 வயது மகளும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
காயமடைந்த இருவரும் குலாலா பிலா துவாங்கு நஜிஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.