
சைபர்ஜெயா, அக்டோபர்-3 – சிலாங்கூர், சைபர்ஜெயாவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டிலிருந்து விழுந்து 17 வயது பல்கலைக் கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எட்டாவது மாடியில் ஓர் ஆடவர் சுயநினைவின்றி விழுந்துகிடப்பதாக, நேற்று பிற்பகல் 3 மணிக்கு மேல் போலீஸுக்குத் தகவல் கிடைத்தது.
பிறகு சம்பவ இடம் விரைந்த போலீஸீம் மருத்துவக் குழுவும் அவர் இறந்து விட்டதை உறுதிச் செய்து, சவப்பரிசோதனைக்காக சைபர்ஜெயா மருத்துவனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தன.
மரணத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனக் கூறிய செப்பாங் போலீஸ், அவர் எத்தனையாவது மாடியிலிருந்து விழுந்தார், எந்த பல்கலைக்கழக மாணவர் என்பது போன்ற விவரங்களை வெளியிடவில்லை.