Latest

சோதனையின்றி இலவச லைசென்ஸ் போலி விளம்பரம் குறித்து ஜே.பி.ஜே எச்சரிக்கை

கோலாலம்பூர், நவ 4 –

JPJ எனப்படும் சாலை போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தி, சோதனை இல்லாமல் இலவச ஓட்டுநர் உரிமங்கள்கள் வழங்கப்படும் என்ற சமூக ஊடக விளம்பரங்களால் ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு ஜே.பி.ஜே எச்சரித்துள்ளது.

டிக்டோக் கணக்கு மூலம் பதிவேற்றப்பட்ட போலி விளம்பரம் தொடர்பாக புகார் வந்ததாக JPJ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தங்களது துறையின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி சோதனை இல்லாமல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பதை விளம்பரப்படுத்தும் இந்த நடவடிக்கை பொதுமக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டது என்று ஜே.பி.ஜே சுட்டிக்கட்டியது.

சம்பந்தப்பட்ட இந்த விளம்பரமும் அதன் டிக் டோக் கணக்கும் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்லாத கணக்குகள் மூலம் விளம்பரங்கள் பரவுவதைக் கண்டு பொதுமக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ புகார்கள் அகப்பக்கமான https://jpj.spab.gov.my வழியாக தகவல்களை உறுதிப்படுத்த அல்லது தொடர்பு கொள்ளும்படி பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என ஜே.பி.ஜே வலியுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!