
கிஷ்த்வார், ஆகஸ்ட்-15 – இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகள் மற்றும் சேறு சகதியிலிருந்து 167 பேர் காப்பாற்றப்பட்டனர்; அவர்களில் 38 பேரது நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மீட்புக் குழு கூறியுள்ளது.
இராணுவமும் தற்போது மீட்புப் பணியில் இணைந்துள்ளது.
அத்துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிட்டார்.
பெருவெள்ளம் ஏற்பட்ட சஷோதி (Chashoti) கிராமம்,
மச்சைல் மாதா புனித யாத்திரைக்கான தொடக்கப் புள்ளியாகும்.
அதே போல் கிஷ்த்வாரில் உள்ள சண்டி மாதாவின் இமயமலைக் கோயிலுக்குச் செல்லும் வழியில் வாகனங்கள் கடைசியாகச் செல்லக்கூடிய கிராமமாகும்.
திடீர் வெள்ளத்தை அடுத்து வருடாந்திர புனித யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.