
ஜாசின், ஜூலை 22 – நேற்று, ஜாஸின் சிம்பாங் பெக்கோ நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலான 14 மரக் கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
உணவகங்கள், துணிக்கடைகள், கைத்தொலைபேசி கடைகள், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பட்டறைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வளாகங்களும் தீயில் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
தகவல் கிடைக்கப் பெற்றவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், குறைந்த நீர் அழுத்தத்தின் சவாலை எதிர்கொண்ட போதிலும், தீயை மற்ற கட்டிடங்களுக்கு பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்று துணை தீயணைப்புத் தலைவர் II சைபுல் நஸ்ரி முகமது நோரின் கூறியுள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்புகள் குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இச்சம்பவத்தில் எந்தவொரு உயிர் சேதங்களும் ஏற்படவில்லையென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.