
செகாமாட், ஆகஸ்ட்-24 – ஜோகூர் செகாமாட்டில் இன்று காலை 6.13 மணியளவில் ரிக்டர் அளவைக் கருவியில் 4.1-ராக பதிவாகிய நிலநடுக்கம் உலுக்கியது.
எனினும் இதுவரை உயிர் அல்லது பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை என மாநில மந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi உறுதிப்படுத்தினார்.
என்றாலும், நிலவரங்களை அரசாங்கம் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்கள் வலுவற்ற கட்டடங்களை விட்டு சற்று தள்ளியே இருப்பதோடு, அதிகாரிகளின் உத்தரவுகளைக் கேட்டு நடக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
மலேசிய வானிலை ஆய்வுத் துறையான MET Malaysia அவ்வப்போது வெளியிடும் தகவல்களையும் சரிபார்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.