
கோலாலாம்பூர், நவம்பர்-26 – ஜோகூரில் பாலியல் துன்புறுத்தல் கும்பலொன்றின் நடவடிக்கை போலீஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஜொகூர் பாரு மற்றும் கூலாயில் ஜூன் 20 முதல் ஜூலை 1 வரை நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில், இந்த கும்பல் சிக்கியது.
அதில் இரு ஆண்கள், ஒரு பெண் என 15 முதல் 26 வரையிலான மூவர் மீட்கப்பட்டனர்.
இவர்கள் போலி வேலை வாய்ப்பு விளம்பரங்கள் மூலம் ஏமாற்றப்பட்டு, பின்னர் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட வலுக்கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கப்பட்டும், அடைத்து வைக்கப்பட்டும், விலக முயன்றால் RM30,000 அபராதம் விதிக்கப்படும் என மிரட்டப்பட்டுள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சந்தேக நபர்களான 17 முதல் 50 வயதிலான 9 மலேசியர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
கும்பலின் தலைவன்கள் இந்த மாதம் தொடக்கத்தில் கைதுச் செய்யப்பட்டனர்.



