Latestமலேசியா

ஜோகூரில் புதிதாக எவருக்கும் தொழுநோய் பதிவாகவில்லை – ஜோகூர் மாநில சுகாதாரத்துறை

ஜோகூர், மார்ச் 7 – ஜோகூரில் இதுவரை எவருக்கும் தொழுநோய் பரவியதாக பதிவாகவில்லை. எனினும் எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்நோக்குவதற்கு ஜோகூர் மாநில சுகாதாரத்துறை தயாராய் இருப்பதோடு தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக அத்துறையின தலைமை இயக்குநர் டாக்டர் மொக்தார் புங்குட் ( Mokhtar Pungut ) தெரிவித்தார்.

இதுவரை தொழுநோய் பரவல் குறித்து எந்தவொரு புகாரையும் ஜோகூர் பெறவில்லை. எனினும் நிலைமையை ஜோகூர் சுகாதாரத்துறை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கும் .

தற்போது, ​​கடுமையான நடவடிக்கை மற்றும் குறிப்பிட்ட தலையீடு தேவைப்படும் அறிக்கைகள் எதுவும் இல்லை. இருப்பினும், சுகாதார அமைச்சுடமிருந்து எங்களுக்கு கூடுதல் அறிவுறுத்தல்கள் கிடைத்தால், மாநில சுகாதாரத்துறை உடனடியாக தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை முடிந்தவரை சிறந்த முறையில் எடுக்கும் என்று அவர் நேற்று மதியம் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 20ஆம்தேதி வரை சிலாங்கூரில் பல மாவட்டங்களில் ஐந்து இடங்களில் தொழுநோய்கள் கண்டறியப்பட்டதாக சிலாங்கூர் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர்
Ummi Kalthom Shamsudin கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!