
செகாமாட், ஆகஸ்ட்-24 – ஜோகூரை இன்று காலை மேலுமொரு நில நடுக்கம் உலுக்கியது.
9 மணிக்கு குளுவாங்கிலிருந்து வடமேற்கே 28 கிலோ மீட்டரில் தொலைவில் ரிக்டர் அளவைக் கருவியில் 2.8 டாக பதிவாகிய வலுவற்ற நில நடுக்கம் பதிவுச் செய்யப்பட்டது.
அதன் அதிர்வுகள் மற்ற மாவட்டங்கள் மட்டுமின்றி நெகிரி செம்பிலான், மலாக்கா தென் பஹாங் வரை உணரப்பட்டன.
எனினும் எந்தச் சேதமும் பதிவுச் செய்யப்படவில்லை.
இவ்வேளையில் மலேசியாவுக்கு எந்தவொரு சுனாமி அபாயமும் இல்லை என உறுதிப்படுத்திய மலேசிய வானிலை ஆராய்ச்சி மையமான MET Malaysia, நிலவரங்களை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கூறியது.
தத்தம் பகுதிகளில் நில அதிர்வை உணர்ந்தவர்கள், மதிப்பீட்டு நோக்கத்திற்காக MET Malaysia இணைய அகப்பக்கத்தில் உள்ள பாரத்தைப் பூர்த்திச் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக காலை 6.13 மணிக்கு ஜோகூர் செகாமாட்டிலிருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் 4.1 magnitude நில நடுக்கம் பதிவாகியது.
எனினும் உயிர் அல்லது பொருள் சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.