
ஜோகூர் பாரு, டிசம்பர் 22-ஜோகூர் பாருவில் வசித்து வந்த லோகிஷா மாரிமுத்து, அவரின் கணவர் அர்வின் ஹெம்பராஜ் இருவரையும் கடந்த 8 மாதங்களாகக் காணவில்லை.
சிரம்பானில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களான 29 வயது லோகிஷாவும், 28 வயது கணவரும் ஈராண்டுகளாக பிரச்னை எதுவுமின்றி வாழ்ந்து வந்தனர்.
மகள் லோகிஷா Medini Gleneagles மருத்துவமனையிலும் மருமகன் சிங்கப்பூரில் AETOS நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர்; திடீரென இருவரும் மாயமானதாக லோகிஷாவின் தாயார் சிவனேஸ்வரி கூறினார்.
சிங்கப்பூர் வரை தேடியும் மருமகன் குறித்தும் தகவல் இல்லை.
இந்நிலையில் கடந்த ஏப்ரலில் போலீஸ் புகார் செய்தும் இதுவரை சரியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
போலிசிடமிருந்து விசாரணை நடைபெறுகிறது, இருவரையும் தேடி வருகிறோம் என்று மட்டுமே பதில் வருவதாகக் குறிப்பிட்ட சிவனேஸ்வரி, தற்போது வேறு வழியின்றி பொது மக்களிடன் உதவியை நாடியுள்ளார்.
தனது 3 பிள்ளைகளில் ஒரே மகளான லோகிஷாவைவும் அவரின் கணவர் இருக்குமிடத்தையும் அறிந்தவர்கள், கீழ் காணும்/திரையில் காணும் தொலைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளுமாறு சிவனேஸ்வரி கேட்டுக் கொண்டார்.



