
ஜோகூர் பாரு, அக்டோபர்- 6,
ஜோகூர் பாரு கூனுங் புலாய் (Gunung Pulai) மலையில், மலையேறும் போது பாதை தவறி தடம் மாறிய பயணி ஒருவரை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.
சம்பவத்தன்று, அவசர அழைப்பு கிடைக்கபெற்றவுடனேயே தீயணைப்பு வீரர்கள் விரைந்துச் சென்று மீட்பு பணியில் ஈடுப்பட்டனர் என்று ஸ்குடாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய (BBP) மூத்த அதிகாரி ஜஸ்னி சைதீன் (Jasni Saidin) தெரிவித்தார்.
தனது சிற்றப்பா மகன் மற்றும் இரு நண்பர்களுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்டவர், தனியாக வழித்தவறி சென்று விட்டதாக அவரின் உறவினர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தீயணைப்பு துறையினர், காவல் துறை மற்றும் பிற இயங்கங்களுடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் பணியில், பாதிக்கப்பட்டவர் மலையின் “பாயிண்ட் 2” பகுதியில், பிரதான சாலையிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் பாதுகாப்பாகக் மீட்கப்பட்டார்.
போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்நபர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.