ஜோகூர் பாரு, டிசம்பர்-15,ஜோகூர் பாருவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இயங்கி வந்த கேளிக்கை மையத்தை போலீசார் முற்றுகையிட்டதில், பல்வேறுக் குற்றங்களுக்காக 122 பேர் கைதாகினர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அச்சோதனை நடத்தப்பட்டதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் கூறினார்.
அம்மையம் முறையான வர்த்தக மற்றும் கேளிக்கை உரிமங்களை வைத்துள்ளது; ஆனால் தினமும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அது இயங்கி வந்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக குமார் சொன்னார்.
மொத்தம் 211 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதில்,78 பேர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதிச் செய்யப்பட்டது.
அவர்களில் 63 பேர் உள்ளூர் ஆடவர்கள், 4 உள்ளூர் பெண்கள், 11 பேர் வெளிநாட்டுப் பெண்கள் ஆவர்.
2.07 கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
இவ்வேளையில் குடிநுழைவு விதிமீறல் தொடர்பில் 35 பேர் கைதாகினர்.
அனைவரும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, அறிக்கையொன்றில் டத்தோ குமார் கூறினார்.