ஜோகூர் பாரு CIQ இல் இரண்டு ஓட்டுநர்கள் சண்டை; Vellfire வாகனம் பஸ் பாதையில் நுழைந்ததே காரணம்

ஜோகூர் பாரு, செப்டம்பர் 29 –
நேற்று, சுல்தான் இஸ்கண்டார் கட்டிடத்தின் (BSI) நுழைவுப் பகுதியில் , ஒரு டொயோட்டா வல்ல்பயர் (Toyota Vellfire) கார் பஸ் பாதையில் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காலை 3 மணியளவில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில், 28 வயது இ-ஹெய்லிங் ஓட்டுநர் மற்றும் 43 வயது பஸ் ஓட்டுநர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமட் தெரிவித்தார்.
மேலும் அவ்விருவருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அவர்களின் தலை, கழுத்து மற்றும் கையில் லேசான காயங்கள் ஏற்பட்டதென்று அறியப்படுகின்றது.
சம்பவத்திற்கு பின், இருவரும் தாமாகவே போலீஸ் நிலையத்துக்கு சென்று தாமாகவே புகார் அளித்தத்தைத் தொடர்ந்து இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வலைத்தளத்தில் வைரலான காணொளியில், நடு சாலையில் இருவரும் சண்டையிட்டு கொண்டிருந்ததைக் காண முடிந்தது.