ஜோர்ஜ்டவுன் பர்மா சாலையில் திடீர் பள்ளம்; பழுதுபார்க்க 5 நாட்கள் பிடிக்கலாம் என Indah Water தகவல்

ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-22,
ஜோர்ஜ் டவுன், ஜாலான் பர்மா சாலையில் நேற்று காலை ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அப்பகுதி போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டது.
உடனடி சீரமைப்பு பணிகளுக்காக சாலை மூடப்பட்டதாக, பினாங்கு மாநகர மன்றம் தெரிவித்தது.
இவ்வேளையில் இரண்டு கழிவுநீர் குழாய்களின் இணைப்பு தளர்வால் 52.5 சென்டி மீட்டருக்கு கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவே அந்த திடீர் பள்ளம் உருவானதற்குக் காரணம் என Indah Water Consortium கூறியது.
இதனால் சாலை நடுவே ஒரு சில மீட்டர் அகலத்துக்கு நிலம் உள்வாங்கியது விசாரணையில் கண்டறியப்பட்டது.
அவசர பழுதுபார்ப்புப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன; நிலைமை முழுமையாக சீரடைய சுமார் 5 நாட்கள் ஆகும் என Indah Water கூறிற்று.
இயன்ற அளவு விரைவாகவும் அதே சமயம் பாதுகாப்பு அம்சத்தில் சமசரம் செய்யாமலும் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அது உறுதியளித்தது.