
சிங்கப்பூர், ஜனவரி-16, போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற மலேசிய ஆடவர் ஒருவர் சிங்கப்பூர் Woodlands-சில் கைதாகியுள்ளார்.
அவரிடமிருந்து 4.6 கிலோ கிராம் எடையிலான கஞ்சாவும், 500 கிராம் methamphetamine போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன.
அந்த மலேசிய-சிங்கப்பூர் எல்லையில் சந்தேகத்திற்குரிய வகையில் காணப்பட்ட 21 வயது மோட்டார் சைக்கிளொட்டியை சோதனை செய்த போது, விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
மோட்டார் சைக்கிளில் முன்பக்கம் வைக்கப்பட்டிருந்த கருப்பு நிற பண்டல் பையில் அவை சிக்கின.
அவற்றின் மொத்த மதிப்பு மலேசிய ரிங்கிட்டுக்கு 556,385 என சிங்கப்பூர் அதிகாரிகள் கூறினர்.
சிங்கப்பூர் சட்டத்தின் படி, 500 கிராமுக்கும் மேற்பட்ட கஞ்சா அல்லது 250 கிராமுக்கு மேற்பட்ட methamphetamine போதைப்பொருட்களை இறக்குதி அல்லது ஏற்றுமதி செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.