Latestமலேசியா

டான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கிண்ண தேசியக் கால்பந்து போட்டி; ஜோகூர் & பேராக் அணிகள் கூட்டு வெற்றியாளர்களாக வாகை சூடின

ஜோகூர் பாரு, ஏப் 15 , 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் கிண்ண காற்பந்து போட்டியில் ஜோகூரின் India Bersatu Kluang குழு மற்றும் பேராவின் Black Panther FCயும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டது.

ஜோகூர் பாசிர் கூடாங் மாநகர் மன்ற விளையாட்டரங்கில் முதல் முறையாக இரு நாட்கள் நடைபெற்ற இந்த காற்பந்து போட்டியில் மலாக்கா Durian Tunggal FC குழு மூன்றாவது இடத்தையும் சிலாங்கூரின் Kapar City FC அணி நான்காவது இடத்தையும் பிடித்தன.

நாடு முழுவதிலும் 16 குழுக்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் சுமார் 400 காற்பந்து விளையாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்ததால் இறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்ற India Bersatu Kluang குழுவும் , Black Panther FCயும் விளையாடுவதற்கு போட்டியின் நடுவர்கள் அனுமதிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து அவ்விரு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவை அந்த இரு அணியின் நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டதாக ம.இ.கா மற்றும் MIED விளையாட்டுப் பிரிவின் தலைவர் Andrew David தெரிவித்தார்.

இப்போட்டியில் சிறந்த விளையாட்டாளராக India Bersatu Kluang குழுவை சேர்ந்த Paythn Banesh மற்றும் சிறந்த கோல் கீப்பராக Durian Tunggal FCயின் Abirran Vijaya Kumar தேர்வு செய்யப்பட்டனர்.

கூடுதல் கோல் அடித்த ஆட்டக்காரரான Durian Tunggal FCயின் Alif Hamzi Helmi Hafiz தேர்வு பெற்றார்.

MIED , ம.இ.காவின் தேசிய விளையாட்டுப் பிரிவு, ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் ரவின் குமார் கிருஷ்ணசாமி தலைமையிலான ஜோகூர் இந்தியர் விளையாட்டு சங்கம் ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியை ம.இகாவின் தேசிய உதவித் தலைவர் டத்தோ M. Asojan நிறைவு செய்து வைத்தார்.

தங்களிடையே மறைந்துக் கிடக்கும் திறமையை வெளிப்படுத்துவதற்கு இளம் காற்பந்து விளையாட்டாளர்களுக்கு வாய்ப்பாக வழங்கிய இந்த காற்பந்து போட்டிக்கு அனைத்து ஆதரவை வழங்கிய ம.இ.காவின் தேசிய தலைவரும் ,AIMST பல்கலைக்கழகத்தின் வேந்தருமான Tan Sri SA Vigneswaran மற்றும் இப்போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய ஊராட்சி மன்றங்கள், MIFA, ஜோகூர் இந்திய காற்பந்து சங்கம் JIFA, Touchtronic Football Club, போட்டியில் கலந்துகொண்ட குழுக்களின் நிர்வாகிகள், பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் ம.இகா விளையாட்டு பிரிவு நன்றியை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் விக்னேஸ்வரன் கிண்ண காற்பந்து போட்டி இனி ஆண்டுதோறும் நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!