Latestமலேசியா

டான் ஸ்ரீ நடராஜா & புவான் ஸ்ரீ மல்லிகா நடராஜா தலைமையில், பத்துமலை ஆலயத்தில் 9ஆம் நாள் நவராத்திரி விழா

கோலாலம்பூர், 12 – கல்வி, கலைகளுக்கு உரியத் தெய்வமாகக் கருதப்படும் சரஸ்வதிக்குரிய வழிபாட்டினை நவராத்திரியின் நிறைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அவ்வகையில், நவராத்திரியின் நிறைவு நாளாக வரக் கூடிய சரஸ்வதி பூஜையுடன் ஆயுத பூஜை, நேற்று பத்துமலை திருத்தலத்தில், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜா மற்றும் புவான் ஸ்ரீ மல்லிகா நடராஜா தலைமையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

ஸ்ரீ சரஸ்வதியாக அம்பிகை 9ஆம் நாள் நவராத்திரியில் பத்துமலையில், எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

அதேவேளையில், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில், நவதுர்கை, கையில் தாமரை, சங்கு, சுதர்சன சக்கரம் எய்தி அருள் பாலித்தார்.

இங்குக் கோயிலுக்கு வருகை அளித்த குழந்தைகளுக்குச் சரஸ்வதி தேவியின் ஓவியம் வழங்கப்பட்டு, வர்ணம் தீட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அக்குழந்தைகளுக்கு எழுதுகோல், வர்ண பெட்டிகள் என எழுதுபொருள்கள் அன்பளிப்புகளாக வழங்கப்பட்டன.

பத்துமலையைத் தொடர்ந்து, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு டான் ஸ்ரீ ஆர். நடராஜா வருகை புரிந்து பூஜையைத் தொடக்கி வைத்துச் சிறப்பித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!