
கோலாலம்பூர், ஏப்ரல் 11 – 16 வயதுகுற்பட்ட தேசிய ரீதியிளான ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் காற்பந்து சுழற்கிண்ணம் நாளை ஏப்ரல் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் ஜோகூர் பாசிர் கூடாங் நகர மைதானத்தில் நடைப்பெறவுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்போட்டியை நாளை ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் துவக்கி வைக்கவிருப்பதாக கூறியுள்ளார் ம.இ.கா தேசிய விளையாட்டுப் பிரிவுத் தலைவர் Andrew David.
MIED, AIMST பல்கலைக்கழகம் மற்றும் MIFA ஆகியவை இணைந்து நடத்தும் இந்த சுழற்கிண்ணம், மாணவர்கள் மத்தியில் விளையாட்டு உற்சாகத்தை தூண்டும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 அணிகளைச் சேர்ந்த சுமார் 400 இளம் வீரர்களுடன் இதில்பங்கேற்கவுள்ளனர்.
இந்த போட்டி, இந்திய மாணவர்களுக்கு தேசிய நிலையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.