ஈப்போ, செப்டம்பர்-11, பேராக்கில் போலி விலைப்பட்டியலைப் (Invoice) பயன்படுத்தி டிஜிட்டல் பியானோ மற்றும் நாற்காலியை வாங்கியதற்காக, ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியைக்கு 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
57 வயது அம்மாது குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, செஷன்ஸ் நீதிமன்றம் அந்த அபராதத்தை விதித்தது.
இனியாவது திருந்துங்கள், இது உலகத் தண்டனை மட்டுமே, மறுமையில் கிடைக்கப் போகும் தண்டனை யாருக்கும் தெரியாது என தீர்ப்பின் போது நீதிபதி கடிந்துகொண்டார்.
2021-ஆம் ஆண்டு டிசம்பரில் தெலுக் இந்தானில் உள்ள ஆரம்பப் பள்ளியில் அக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.