Latestஉலகம்

டெக்சஸில் கடும் வெப்பதால் சோளம் வெடித்தது

டெக்சஸ், ஜூலை-13-அமெரிக்கா, டெக்சஸில் அறுவடைக்கு முன்னரே சோளம் வெடித்த சம்பவம் அங்கு கடும் வெப்பம் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதைக் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடுமையான வெப்பம் காரணமாக, சோளம் தண்டுகளிலேயே நேரடியாக வெடிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவ்வாறு கூறப்படுவதை விவசாயத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பல சாலைகளில் பயணித்த வாகனமோட்டிகள், வயல்களில் இருந்து கொட்டிய வெள்ளைக் குவியல்களை முதலில் ஆலங்கட்டி மழை என்று நினைத்துள்ளனர்.

எனினும் அதனைச் சுவைத்துப் பார்த்த விவசாயி ஒருவர், அவை சோளம் என்பதைக் கண்டறிந்தார். நிழலிலேயே 108 டிகிரி வெப்பம் இருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, கடந்த வாரம் அந்த நிழல் வடக்கு நோக்கி நகர்ந்து விட்டதாக அந்த விவசாயி கவலை தெரிவித்திருந்தார். சோளங்கள் வெப்பம் காரணமாக இயல்பாகவே வெடிப்பதை ஒரு வானிலை நிகழ்வாக வானிலை ஆய்வாளர்கள் அங்கீகரிக்கவில்லை. ஆனால் டெக்சாஸில் இந்த ஜூலை மாதத்தை விவரிக்க முடியவில்லை என அவர்கள் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

அங்குள்ள திரையரங்குகள் அருகிலுள்ள சோள வயல்களைக் கண்காணித்து வருவதாகவும், அதே சமயம் அணிகளுக்கும் காகங்களுக்கும் கொள்ளை விருந்தாக அது மாறி விட்டதாகவம் கறப்படுகிறது.

இதனிடையே, வெப்பநிலை மேலும் உயர்ந்தால், விரைவில் தரையிலிருந்து நேரடியாக புகை வந்து மாட்டிறைச்சித் துண்டுகளும் உருளைக் கிழங்குகளும் வேக வைக்கப்படுவதைக் காண நேரிடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!