
லண்டன், நவம்பர்-10,
பனோரமா ஆவணப்படம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, BBC தலைமை இயக்குநர் டிம் டேவி (Tim Davie) மற்றும் செய்தித் தலைவர் டெபோரா டெர்னஸ் (Deborah Turness) இருவரும் ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த ஆவணப்படம் தவறாக தொகுக்கப்பட்டு, 2021-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி டோனல்ட் ட்ரம்ப் நிகழ்த்திய உரையே Capitol கலவரத்திற்கு தூண்டியது போல காட்டியதாக முன்னதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ட்ரம்ப் உரையின் இரண்டு பகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதனால் BBC நடுநிலைத் தவறியதாக எழுந்த நீண்ட கால சர்ச்சைக்கு முடிவாக இந்த இரு முக்கியப் புள்ளிகளின் ராஜினாமா அமைந்துள்ளது.
“BBC தவறுகள் செய்திருக்கலாம், ஆனால் பொது நிறுவனமாக நாங்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும்” என டேவி கூறினார்.
“இந்த சர்ச்சை BBC-க்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, நான் பதவியிலிருந்து விலகுகிறேன். ஆனால், BBC பாராபட்சமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை” என டெர்னஸ் தெரித்தார்.
இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் இந்த மாற்றம் BBC-யின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதிபர் ட்ரம்ப்பும் இம்முடிவை வரவேற்றுள்ளார்.



