தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களின் சேவைகளை பயன்படுத்தும் சீனப் பெற்றோர்கள்
பெய்ஜிங், ஜன 9 – தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு வாடகை மோட்டார் சைக்கிளோட்டிகளின் சேவையை பயன்படுத்தும் சீனப் பெற்றோர்களின் போக்கு பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் இதர குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என South China Morning Post தினசரி தெரிவித்துள்ளது.
குளிர் காலத்தில் தூக்கத்திலிருந்து தாம் எழமுடியாத காரணத்தினால் வாடகை மோட்டார்சைக்கிளோட்டியின் சேவையை பயன்படுத்தி காலை 6.30 மணிக்கு தனது மகனை பள்ளிக்கு அனுப்பிவைத்த தகவலை சீனாவின் Guangxi வட்டாரத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் இணையத்தில் பகிர்ந்துகொண்டார் .
எனது வீட்டிற்கு அருகிலேயே உள்ள பள்ளியில் என் மகன் படிக்கிறான், எனவே வாடகை மோட்டார்சைக்கிளோட்டி மூலம் அவனை பள்ளிக்கு அனுப்பிவைத்ததில் எந்தவொரு தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
சீனாவில் அதிகமாக இந்த சேவையை வழங்கிவரும் மோட்டார்சைக்கிளோட்டிகள் நிபுணத்துவ ரீதியில் செயல்படுகின்றனர்.
தன மகனை பள்ளியில் இறக்கிவிட்ட பின் அதனை புகைப்படம் எடுத்து அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் அனுப்பிவைத்தாக ஷெங் (Zheng) என்ற அந்த பெண் கூறியிருந்தார்.
அதே வேளையில் மழைக்காலத்தில் வாகன போக்குவரத்து நெரிசல் மோசமாக இருக்கும் என்பதால் வாடகை மோட்டார்சைக்கிளோட்டிகள் சேவை மூலம் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் வசதி இருந்தாலும் முன்பின் அறிமுகமில்லாதவர்களை நம்பி பிள்ளைகளை அனுப்பிவைப்பது வரவேற்கக்கூடிய நடவடிக்கையாக இல்லையென்பதையும் ஷெங் ஒப்புக்கொண்டார்.