கோலாலம்பூர், நவ 25 – பல வழித் தடங்களுக்கான விரைவு டோல் வசூலிக்கும் முறையை அமல்படுத்துவது மீதான உடன்பாட்டிற்கான 33 நெடுஞ்சாலைகளில் 13 நிறுவனங்கள் இன்னமும் இணக்கம் தெரிவிக்கவில்லையென பொதுப்பணி அமைச்சு அறிவித்திருக்கிறது. இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகளிலுள்ள நெடுஞ்சாலைகளில் தடுப்பு கோல் அற்ற டோல் கட்டண வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற நடைமுறையை மலேசியாவில் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் அமல்படுத்துவது தொடர்பாக தற்போது பேச்சு நடத்தப்பட்டு வருவதாக பொதுப் பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்தார்.
இந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி உடன்பாடு காணப்படும்வரை பேச்சுக்களுக்கான கால அவகாசம் உள்ளது. அதன் பிறகு நெடுஞ்சாலை நிறுவனங்கள் இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார் .