Latestமலேசியா

’வேல் வேல்’ சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரம்; Era FMன் 3 அறிவிப்பாளர்கள் உட்பட 6 பேர் இன்று புக்கிட் அமானில் வாக்குமூலம்

கோலாலம்பூர், மார்ச் 5 – தைப்பூச காவடி ஆட்டத்தை கேலி செய்து ஏரா எப்.எம் ( ERA FM ) வானொலி நிலையத்தில் காணொளி வெளியிட்டு சர்சைக்கு உள்ளான அதன் மூன்று அறிவிப்பாளர்கள் உட்பட ஆறு பணியாளர்கள் இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் வழங்கியபின் நண்பகல் மணி 1.10 அளவில் அங்கிருந்து வெளியேறினர்.

இந்து சமயத்தை கேலி செய்யும் வீடியோ வைரலான விவகாரம் தொடர்பாக அனைவரும் சாட்சியம் அளித்து வெளியேறினர். இருப்பினும், மூன்று பிரபல வானொலி அறிவிப்பாளர்கள் ஊடகங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் புக்கிட் அமானின் உட்பகுதி நுழைவாயில் மூலமாக அழைத்துச் சென்றதே இதற்கான காரணமாகும்.

அந்த மூவரும் டொயோட்டா வெல்ஃபயர் ( Toyota Vellfire ) காரில் பயணித்தனர். ERA FM வானொலியின் இதர மூன்று ஊழியர்கள் புக்கிட் அமானில் இருந்து பல நபர்களுடன் வெளியேறினர்.

அந்த அறுவரும் இன்று காலை மணி 10.30 அளவில் புக்கிட் அமான் வந்தனர். புக்கிட் அமான் உயர் குற்றவியல் விசாரணை பிரிவின் அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!