
கோலா கிராய், ஆகஸ்ட் 6 – இன்று காலை, கம்போங் கோலா கிரிஸில், தனது சொந்த தந்தையை நாற்காலியால் தாக்கி, அவரின் மரணத்திற்கு காரணமான மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
74 வயதான அம்முதியவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்தார் என்று கோலா கிராய் மாவட்ட காவல்துறைத் தலைவர், மஸ்லான் மமத் கூறியுள்ளார்.
சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை மர நாற்காலியால் தாக்குவதற்கு முன்பு அவ்விருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோலா கிராய் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனைக்கு (HSIP) அனுப்பப்பட்டுள்ளது.