
கோலாலம்பூர், ஜூலை 10 – ஜூலை 6 ஆம்தேதி நடந்த Toto 6/55
Jackpot குலுக்களில் சிலாங்கூரைச் சேர்ந்த 33 வயதுடைய திட்ட நிர்வாகி ஒருவர் 14.6 மில்லியன் பரிசுத் தொகையை வென்றார்.
தனது மற்றும் தன்னுடைய காதலியின் மை கார்ட் எண்களை வரிசைப் படுத்தி எழுதிய டோட்டோ எண்களுக்கான பரிசுத் தொகையை அந்த ஆடவர் வென்றார். கடந்த மூன்று ஆண்டுகாலமாக தாம் எழுதிவந்த 4,8,11,18,20 மற்றும் 29 ஆகிய எண்கள் மூலம் பரிசு தொகையை அந்த அதிஸ்டசாலி வென்றுள்ளார்.
நான் எப்போதும் இந்த வெற்றி எண்களைக் கொண்டு லோட்டோ விளையாட்டுகளை விளையாடுவேன், முன்கூட்டியே 8 குலுக்களுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுகளைப் பார்த்தவுடன் வெற்றிக்கான
RM14,628,701.20 பரிசைப் பெறுவதற்காக STM லாட்டரி தலைமை அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்பு தூக்கமில்லாத இரவைக் கழித்ததையும் அவர் ஒப்புக் கொண்டார்.
புதிதாகக் கிடைத்த செல்வத்தைக் கொண்டு, புத்திசாலித்தனமான முதலீடுகளில் கவனம் செலுத்த அவர் திட்டமிட்டுள்ளார். அந்த நபரின் Jackpot வெற்றியை STM லாட்டரி Sdn Bhd உறுதிப்படுத்தியுள்ளது.