
சென்னை, டிசம்பர்-1 – தமிழகம் சிவங்கையில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற பேருந்தும் மோதிக் கொண்டன.
இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மரண எண்ணிக்கை உயரலாம் என போலீஸ் அச்சம் தெரிவித்துள்ளது.
இடிபாடுகளில் யாராவது சிக்கியிருக்கலாம் என்ற எண்ணத்தில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
விபத்துக்கான காரணமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.



