தாய்லாந்தில் புத்தாண்டுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

பாங்காக், நவம்பர் 17 – தாய்லாந்து அரசு, வரும் புத்தாண்டை முன்னிட்டு ஐந்து நாட்கள் நீண்ட விடுமுறையை அறிவித்துள்ளது.
அதன்படி, 2025 டிசம்பர் 31 தொடங்கி 2026 ஜனவரி 4 வரை நாடு முழுவதும் நீண்ட விடுமுறை நீடிக்கிறது.
இம்முடிவு உள்நாட்டு சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதையும், பொருளாதார சவால்களுக்குப் பிறகு மீண்டு வரும் உள்ளூர் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நீண்ட விடுமுறை மக்கள் அதிகமாக பயணம் செய்வதற்கும், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் செலவிடுவதற்கும், பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நீண்ட விடுமுறை கிடைப்பதால், தாய்லாந்தின் முக்கிய சற்றுலா தலங்களில் அதிகமான மக்கள் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், பயணிகள் முன்கூட்டியே தங்கும் விடுதி மற்றும் போக்குவரத்தை முன்பதிவு செய்து, பாதை நெரிசலை கருத்தில் கொண்டு கூடுதல் பயண நேரத்தை திட்டமிடுமாறு அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.



