Latestமலேசியா

தாய்லாந்தில் மலேசியர்கள் நிறுவிய அனுமான் ஆலயத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதலாம் ஆண்டு திருவிழா

சொங்க்லா, ஏப்ரல்-8-புத்த மதத்தை அதிகாரப்பூர்வ மதமாகக் கொண்ட தாய்லாந்தில், இந்து தெய்வ வழிபாடுகளும் புகழ்பெற்றவையே.

இந்து மதத்தின் தாக்கங்கள் இன்றளவும் தாய்லாந்து மக்களின் கலாச்சாரங்களில் பின்னிப் பிணைந்திருப்பது கண்கூடு.

கணேஷா என்றப் பெயரில் விநாயகர், அனுமான் போன்ற ஆலயங்களை அங்குக் காணலாம்.

இந்நிலையில், மலேசியாவிலிருந்து அனுமான் சிலை வடிவமைக்கப்பட்டு அங்கே உள்ள ஒரு புத்தர் ஆலயத்தில் தனியாக அனுமன் ஆலயம் ஒன்றை கட்டியுள்ளனர் மலேசியர்கள சிலர்.
அவ்வாலயத்தில் எதிர்வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதலாண்டு திருவிழாவும் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சொங்க்லா மாவட்டத்தில், Danok-கில் அமைந்திருக்கிறது இந்த அனுமான் வாட் ஹிலாக்காட் (Hanuman Wat Hlakkhet) ஆலயம்.

இதனிடையே, தாய்லாங்து மக்கள் பார்த்த அனுமான் வேறு, தாங்கள் வைத்துள்ள அனுமான் வேறு. ஆச்சரியத்துடன் வரும் மக்கள், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் அனுமானை வணங்கிச் செல்வதாக அந்த ஆலய கட்டுமானத்த்தை எடுத்து நடத்திய சமூக ஊடகவியலாளர் குமார் தெரிவித்தார்.

இங்கு வருக் பக்தர்கள், வேண்டுதல் செய்து, படையல் வைத்து வழிபட்டு செல்கின்றனர்.

முதலாமாண்டு திருவிழா கொடியேற்றுதலுடன் தொடங்கி; ஹோமம் வளர்க்கப்பட்டு, தாய்லாந்தில் பிரபலமான ‘மஞ்சள் நீராடு’ போன்ற நீர் விழா நேரத்தில் அபிஷேகங்களோடு இத்திருவிழா நடைப்பெறவுள்ளது.

எனவே, தாய்லாந்து சுற்றுலா செல்பவர்களோடு மக்களும் தவறாமல் கலந்துகொண்டு திருவிழாவை சிறப்பிக்குமாறு குமார் கேட்டுக் கொண்டார்.

உள்ளூரில் தோட்டப்புறங்கள் நகரங்களில் பல்வேறு கோவியில் திருவிழாக்களைக் கண்ட நமக்கு, தாய்லாந்து சென்று இந்த அனுமன் திருவிழாவை நேரில் பார்ப்பது வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!