Latestமலேசியா

தாய்லாந்தில் ‘pay later’ திருமணம்; வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு

கோலாலாம்பூர், ஏப்ரல்-2 – சமூக ஊடகங்களில் வைரலான ஒரு விளம்பரத்தல் வலைத்தளவாசிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது.

தாய்லாந்தில் ‘buy now, pay later’ முறையில் திருமணப் பேக்கேஜ்கள் வழங்கப்படுவதாக Threads-ல் வெளியிடப்பட்ட பதிவே, மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அடிப்படை பேக்கேஜ் RM1,899, தூதரக சரிபார்ப்பு RM3,699, மேலும் ‘premium all-in’ பேக்கேஜ் RM9,499 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

வலைத்தளங்களில் பலர், திருமணத்தை கடன் அடிப்படையில் நடத்துவது ஒழுக்க ரீதியாகவும், நிதி ரீதியாகவும் தவறானது எனக் கண்டித்துள்ளனர்.

மேலும் சிலர், இது மலேசிய சட்டத்திற்கு முரணாக, மறைமுகமாக பலதார திருமணத்தை ஊக்குவிக்கும் வழியாகும் எனக் கூறினர்.

‘ஒரு மனைவியை வைத்து குடும்பம் நடத்த முடியாவிட்டால், திருமணம் செய்ய வேண்டாம்’ எனும் கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!