
தவாவ், ஆகஸ்ட் 18 – தாவாவ்வில், வீட்டின் கதவைத் திறப்பதற்கு தாமதமானதால், மனைவியின் கையில் குத்தி தாக்கிய 30 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.
சந்தேக நபர், 50 வயது மதிக்கத்தக்க தனது மனைவியின் இடது கையை குத்தியதால் வலி மற்றும் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளதென்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் சந்தேக நபரை கைது செய்தனர் என்று தவாவ் துணை காவல் துறைத் தலைவர் சாம்பின் பியூ தெரிவித்தார்.
இந்த வழக்கு, குற்றவியல் சட்டம் மற்றும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குடும்ப வன்முறை என்பது ஒரு கடுமையான குற்றம் என்றும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவரிடமும் காவல்துறை சமரசம் செய்யாது, என்றும் அவர் மேலும் எச்சரித்தார்.