
கெமாமான், ஜனவரி-21-திரங்கானு, கெமாமானில் 5 வயது சிறுவன் ரம்புத்தான் பழக்கொட்டை தொண்டையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
வீட்டில் 6 வயது அக்காள் பழத்தை உரித்து கொடுக்க, அவனும் மகிழ்ச்சியாக உண்டுகொண்டிருந்த போது அத்துயரம் நிகழ்ந்தது.
சிறுவனின் குரல் திடீரென மாறியதால் குடும்பத்தினர் அவசரமாக கெமாமான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
தொண்டையில் சிக்கிய ரம்புத்தான் கொட்டையால் மூச்சுத்திணறி மரணம் ஏற்பட்டது சவப்பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டது.
விதை அல்லது கொட்டையுள்ள பழங்களை சிறுவர்களுக்கு கொடுக்கும்போது பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



