
குஜராத், நவம்பர் 17 – திருமணத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக மணமகளை கொன்ற மணமகனின் செயல் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு முன்னதாக அவ்விருவரும் திருமண சேலை மற்றும் பணம் குறித்து விவாதம் செய்ததாகவும் கோபத்தில் மணமகன் கம்பியைக் கொண்டு மணமகளைத் தாக்கி, அவரின் தலையை சுவற்றில் மோதியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துக்குப் பிறகு அவன் வீட்டை சேதப்படுத்தி விட்டு ஓடிவிட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே அவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்ததைத் தொடர்ந்து நேற்று அவர்களின் திருமணம் நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் போலீசார் மணமகனைக் கைது செய்து மேல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.



