
பெங்களூரு, ஆகஸ்ட்-3,
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் திருமணத்திற்கு பிந்தைய விருந்தில், கூடுதலாக ஒரு கோழி இறைச்சித் துண்டு கேட்டதற்காக ஓர் ஆடவர் குத்திக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு நண்பர்களுக்காக தனது தோட்ட வீட்டில் அபிஷேக் என்பவர் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
அப்போது வினோட் என்ற நண்பருக்கு பரிமாறப்பட்ட கோழி இறைச்சித் துண்டு மிகவும் சிறியதாக இருந்துள்ளது; இதனால், பரிமாறிய நண்பரிடம் கூடுதலாக ஒரு இறைச்சித் துண்டு கேட்கப் போய், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சினத்தின் உச்சிக்குச் சென்ற அந்நபர், கண்ணிமைக்கும் நேரத்தில் வெங்காயம் வெட்டும் கத்தியால் வினோத்தைக் குத்தி விட்டார்.
இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த வினோத், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஒரு கோழி இறைச்சித் துண்டுக்காக உயிரே போயிருக்கும் அச்சம்பவத்தை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.