
செத்தியூ, ஆகஸ்ட்-11 – திரங்கானு, செத்தியூவில் தனது இரண்டாவது மனைவியின் வீட்டை கொளுத்திய சந்தேகத்தில், 79 வயது முதியவர் கைதாகியுள்ளார்.
நேற்று அதிகாலை 1 மணிக்கு மேல் Sungai Tong, Kampung Langkap Baru-வில் உள்ள இரண்டாவது மனைவியின் வீட்டுக்கு வந்த அந்நபர், திறந்திருந்த முன்பக்க ஜன்னல் கண்ணாடி வழியாக ஏதோ பொருளொன்றை வீட்டினுள் வீசியுள்ளார்.
சட்டென உள்ளே தீப்பிடித்துக் கொள்ள, அவர் பாட்டுக்கு அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.
மாற்றான் தந்தையின் செயலை கண்டு விட்ட பிள்ளை அது குறித்து போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து கைதான அம்முதியவர் 4 நாட்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டார்.