Latestமலேசியா

திரேசா கோக்கிற்கு RM66,000 நீதிமன்றச் செலவை செலுத்த செருப்பு, துண்டை ஏலம் விட்ட ஜமால் யூனோஸ்

திரேசா கோக்கிற்கு RM66,000 நீதிமன்றச் செலவை செலுத்த செருப்பு, துண்டை ஏலம் விட்ட ஜமால் யூனோஸ்

கோலாலம்பூர்,பிப்ரவரி-11-

செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் ( Teresa Kolk ) தொடுத்த அவதூறு வழக்கிற்கான தீர்ப்பிற்கான செலவுத் தொகையில் எஞ்சிய 66,061 ரிங்கிட் 84 சென் செலுத்துவதற்காக தனது செருப்பு மற்றும் ஒரு துண்டை சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனோஸ் ஏலமிட்டுள்ளார்.

டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் மந்திரிபெசராக இருந்த காலத்தில் சிலாங்கூர் அரசியல் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு பொருட்களையும் தாம் ஏலத்தில் விற்பனை செய்ததாக ஜமால் தெரிவித்தார். இரண்டு பொருட்களும் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டு 66,000 ரிங்கிட்டிற்கு ஏலம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். .

தெரசா கோக்கின் 66,000 ரிங்கிட் கோரிக்கைக்கு இன்று நீதிமன்ற ஏலம் இருக்க வேண்டும், ஆனால் நேற்று என் மகன் முகமது அமின் டேனியல் உத்தரவை நிறுத்தி வைக்க முடிந்தது. இருப்பினும், செருப்பு மற்றும் துண்டின் ஏலம் தொடரும், அதனால் நாங்கள் தெரசா கோக்கிற்கு பணம் செலுத்த முடியும் என்று இன்று தனது முகநூல் வீடியோவில் ஜமால் கூறியிருந்தார்.

பொருட்களை வாங்க இரண்டு ஏலதாரர்கள் இருந்தனர் . நெகிரி செம்பிலானைச் சேர்ந்த ஒரு நபர் துண்டை வாங்கினார், சபாவைச் சேர்ந்த மற்றொரு ஏலதாரர் தனது செருப்புகளில் ஒன்றை 33,000 ரிங்கிட்டிற்கு வாங்கியதாகவும் ஜமால் தெரிவித்தார்.

அந்த செருப்பை பிரேமிட்டு அதனை விரைவில் தெராசா கோக்கின் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்போவதாக அதனை வாங்கியவர் தெரிவித்துள்ளார். அந்த பணம் கிடைத்தவுடன் அதனை திரேசா கோக்கிடம் ஒப்படைக்கப் போவதாகவும் ஜமால் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!