
கோலாலம்பூர், அக்டோபர்-28, தீபாவளியை ஒட்டி நாடளாவிய நிலையிலுள்ள நெடுஞ்சாலைகளில் இலவச டோல் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு 12.01 மணி முதல் அக்டோபர் 30-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை 2 நாட்களுக்கு அனைத்து தனியார் வாகனங்களும் இந்த இலவச டோல் கட்டணச் சலுகையை அனுபவிக்கலாம்.
எனினும் ஜோகூர் பாலத்திற்கும், இரண்டாவது (2nd Link) பாலத்திற்கும் இந்த சலுகை பொருந்தாது என பொதுப் பணி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த இலவச டோல் கட்டணச் சலுகையால் அரசாங்கம் 38 மில்லியன் ரிங்கிட்டை நெடுஞ்சாலைப் பராமரிப்பு நிறுவனங்களுக்கு இழப்பீடாக வழங்கும்.
விழாக்காலங்களில் மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் மடானி அரசாங்கம் அறிவித்துள்ள இச்சலுகையை, வாகனமோட்டிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சொந்த ஊர்களுக்கான பயணத்தை சுமூகமாக்க, நன்கு திட்டமிட்டுக் கொள்ளுமாறும் பொது மக்களை அமைச்சு கேட்டுக் கொண்டது.